சிவகிருஷ்ணா, சிவகாசி அருகே செவல்பட்டியிலிருந்து சென்னைக்கு வந்தவர். அனிமேஷன் படித்துவிட்டு கேரளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவரை முழுநேர புகைப்படக் கலைஞர் ஆக்கியிருக்கிறது அவரது ஆர்வம். ஆரம்பத்தில் பல இடங்களுக்கும் சென்று ஸ்ட்ரீட் போட்டோகிராபி பண்ணிக்கொண்டிருந்தவர் இப்போது திருமண நிகழ்வுப் படங்களை எடுக்கும் தொழிலில் பிசியாக இருக்கிறார். வண்ணமயமான அதேசமயம் அழுத்தமான காட்சிகளைப் பதிவு செய்கிறது இவரது காமிரா.‘அனிமேட்டராக பணிபுரிந்தபோது மூச்சு முட்டும் அளவுக்கு வாழ்க்கை இறுக்கமாக இருந்தது. அதில் இருந்து வெளியேறி சுதந்தரக் காற்றை சுவாசிக்க வழிவகுத்தது என் காமிராதான்,'' என்கிறார்.
ஜூன், 2018.